‘சீன்’ முதல் ‘ஓம்’ வரை: நவம்பர் மாத தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

தீபாவளி ரிலீஸ் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு வழிவிட்டு பொறுமையாக களம் காணவரும் படங்கள் என நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கும் படங்களின் பட்டியல் இது.
ராமாயணா: பாகம் 1: நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல், அனுபம் கேர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நவம்பர் 5 அன்று தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியாகிறது.
சீன்: சூர்ய நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சீன்’. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மர்மமான கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வரும் கிறுக்குத்தனம் நிறைந்த இன்பராஜ் என்கிற காவல் அதிகாரி பற்றி பேசும் இந்த நடைச்சுவை கலந்த படம் நவம்பர் 6 அன்று திரையில் வெளியாக இருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்தப் படத்தில் அம்மனாக நயன்தாரா, வில்லியாக ரெஜினா காஸ்சன்ட்ரா, துனியா விஜய், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த பக்தி ஃபேண்டஸி படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
போகி: சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘போகி’. இந்தப் படத்தில் ஷர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் நவம்பர் 12 அன்று வெளியாக இருக்கிறது.
Comments
No comments yet. Be the first to write.