📅 Thursday, 05 November 2026 📍 Detecting location… ⛅ --°C
முக்கிய செய்திகள்

குரூப் 4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமை ( நவ.5) முடிவடைகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இதுவரை 9.80 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வியாழக்கிழமை ( நவ.5) முடிவடைகிறது.

தமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ஆம் தேதி அன்று வெளியிட்டது.


இதற்கான இணையவழி விண்ணப்பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவா்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனா்.

இத்தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 9.80 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வியாழக்கிழமையுடன் (நவ.5) தேதி முடிவடைகிறது.

எனவே, குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நவ. 5-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தோ்வு அடுத்த ஆண்டு ஜன. 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Comments

No comments yet. Be the first to write.