நவம்பர் 9 ரேஷன் கடைகள் இயங்குமா? - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 09-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 21.11.2026 சனிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் வேலைநாளாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு வசதியாக சிறப்பு ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, மறுநாள் (நவ.9) திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், "இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
No comments yet. Be the first to write.